கவிஜனின் வாழ்கையின்
அத்திவாரம் தான் காதல்..
அதனைப் பற்றி
கவிதை கேட்டாய்
எழுதுகிறேன்
என் கற்பனையில் சரணமாயிருந்த
அந்த உன்னதமான
மௌன கீதங்களின்
ரகசியத்தைப் பற்றி
உனக்காக…!
தென்றல் காற்றில்
சஞ்சரித்துக் கொண்டிருந்த
சுதந்திரமான நிலவை
தன மூன்றெழுத்து வலிமையின் மூலம்
ஒரு கட்டுப்பாட்டுக்குள்
நிறுத்தி வைக்கும் வித்தியாசமான
உணர்வு..
ஆறுதலாக இருப்பதாக
நினைத்துக்கொண்டு
அழவைத்து விட்டு கைக்குட்டையுடன்
திரியும்
போலிப் பாசம்..
இந்த விரல்
இருக்கும் வரையில்
உன் கண்ணை ஈரமாக
விடமாட்டேன் என்று
பகர்ந்துவிட்டு கடைசியில்
கண்ணுக்குள்ளே குத்திவிட்டு செல்லும்
சுயநலத்தின் அடித்தளம்..
ரசனை இல்லை என்பதற்காக
இயற்கையில் தனது
குறுக்கு மூளையை செலுத்தி
தற்குறிப்பேற்ற அணிகளை
கையாள்வதில் தற்பெருமை
கொள்ள வைக்கும் சான்றான்மை..
நம் அன்புக்குள் நாமிருவரும்
காலம் முழுவதும்
கனவு காண்போம் என்று
சூளுரைத்துவிட்டு ஒருவருக்கு
துன்பம் வரும் பட்சத்தில்
நிழலைக்கூட விரும்பாமல்
கை கழுவி விடும் சுயநலம்..
என்னை விட்டு விலகினாலும்
உன் நினைவுகள் விலகவில்லை
என்பதாக அடுத்தவரின் இதயத்தை
திருடிவிட்டதென்று நினைத்து
பெருமைப்படும் சவுந்தர்யம்..
இவை எல்லாம்
காதலின் ஒரு பக்கம் தான்
மறுபக்கம் சுவாரசியமானது
தொடர்ந்து செல்..
கண்ணுக்கு எட்டாத
தூரத்தில் இருந்தாலும்
மனதுக்கு எட்டிவிட வேண்டும்
என்பதற்காக உயிரைக் கையில்
ஏந்திக்கொண்டு அந்த தூரத்து சந்தோசத்துக்காக
ஏங்கும் சுகம்..
பேச்சுப் போட்டிகளில்
தங்கப் பதக்கம் பெற்றவர்களும்
அந்த ஒற்றை வார்த்தையை
சொல்லும் பொது மட்டும்
வாயால் தடுக்கி விழுந்து
துன்பம் காணும் இன்பம்..
“எவ்வளவோ பேச இருந்தன
என் உதடுகள்
உன்னைக் கண்டதும் ஊமை
கீதம் இசைத்தன
அச்சத்தால் அல்ல வெட்கத்தால்”
என்று ஏட்டில் கவிதை
மூலம் எழுத்துக்கு சரணம்
அளிக்கும் கொடை வள்ளர்கள்..
கடவுளின் படைப்புக்களின்
அற்புதத் தன்மையையும்
அழகுக் குறிப்புக்களையும்
இரண்டாம் முறையாக
இரைமீட்ட விரும்பும் வெறி..
அடுத்தவரின் விருப்பத்துக்காக
தானும் ஒத்துப் போகும்
ஒற்றுமை..
அடுத்தவரின் இன்பத்தில் தான்
மகிழும் பேராண்மை..
கனவுகளை கண்டு
பயப்பட்டுபோன மனசு
திடீரென்ற ஞானோதயத்தினால்
அதனையே வலம்வர வேண்டும்
என்ற பிடிவாதம்..
நவீன காலத்திலும்
மூட நம்பிக்கைகளை காப்பாற்ற
விளையும் சமூக சேவை…
No comments:
Post a Comment